
தற்போது நீங்கள் w3Tamil Widget களினை பயன்படுத்தி மிக இலகுவாக தமிழ்99 விசைப்பலகையமைப்பிலமைந்த எழுதியை உங்களது வலைப்பதிவிலோ அல்லது இணையத்தளத்திலோ இணைத்துக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கீழ்வரும் HTML கட்டளைகளை உங்கள் வலைப்பதிவிலோ அல்லது இணையத்தளத்திலோ இணைப்பதுதான்.
நீங்கள் Blogger.com இல் வலைப்பதிவு வைத்திருப்பவரெனில் கீழ்வரும் பொத்தானை அழுத்துவதன் மூலம் மிக இலகுவாக w3Tamil எழுதியினை உங்கள் வலைப்பதிவில் இணைத்திடலாம்.
விசைப்பலகை செலுத்துவான்(Keyboard driver) நிறுவப்பட்டிராத கணினிகளிலும் தமிழில் தட்டச்சிடுவது இந்த எழுதி மூலம் சாத்தியப்படுகின்றது. இவ்வெழுதியில் தட்டச்சிட்டதை நகலெடுத்து நீங்கள் விரும்பிய இடங்களில் ஒட்டிட முடியும். மேலும் மற்றைய தமிழ் தட்டச்சு விசைப்பலகை முறைகளுடன் ஒப்பிடுகையில், மிக வேகமாக தட்டச்சிடக்கூடியவாறமைந்த தமிழ்99 விசைப்பலகையமைப்பை அடிப்படையாகக் கொண்டே இவ்வெழுதி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த இலவச சேவையினைப்பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் இங்கு பகிர்ந்து கொள்ளவும்.
w3தமிழ் விசைப்பலகை செய்திட்டம் (w3Tamil Keyboard Project) தொடர்பாக நீங்கள் ஏற்கனவே அனுப்பிய கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் இவ்விடத்தில் மீண்டுமொருமுறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment